Home நாடு சபா: பிரபல காற்பந்து வீரர் ரொசைமி விபத்தில் படுகாயம்!

சபா: பிரபல காற்பந்து வீரர் ரொசைமி விபத்தில் படுகாயம்!

522
0
SHARE
Ad

kksfootballer 2கோத்தாகினபாலு, ஜூலை 6 – மலேசியாவின் புகழ்பெற்ற காற்பந்தாட்ட வீரர் ரொசைமி அப்துல் ரஹ்மான் (வயது 23) இன்று சபாவில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.

சபா காற்பந்து சங்கத்தின் விளையாட்டாளரான ரொசைமியும் அவரது நண்பரும், இன்று லிக்காஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள சான் தாவ் சீனப் பள்ளிக்கு அருகே காரில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளானதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், இருவரும் தற்போது சபா குயின் எலிசபத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice