Home கலை உலகம் பாகுபலியைப் பார்த்துப் பிரமித்த தணிக்கைக் குழுவினர்!  

பாகுபலியைப் பார்த்துப் பிரமித்த தணிக்கைக் குழுவினர்!  

541
0
SHARE
Ad

anu1-600x300சென்னை, ஜூலை 6- இந்தியத் திரைப்பட வரலாற்றில் அதிகப் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி.

3D-ல்( முப்பரிமாணக் காட்சியில்)  உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கில் நேரடியாகத் தயாராகியுள்ளது; மேலும், இந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்கு மொழிகளிலும், வரும் ஜூலை 10-ஆம் தேதி, கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளுக்கு மேல் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

#TamilSchoolmychoice

தணிக்கைச் சான்றிதழுக்காக இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவினருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தையும், மிரள வைக்கும் காட்சியமைப்பையும் பார்த்து வியந்து போனார்கள் தணிக்கைக் குழுவினர்.

பல சிறப்பம்சங்களைக் கொண்ட பாகுபலி படத்தைத் தணிக்கை செய்ததில் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், பாகுபலி படத்தின் தணிக்கைச் சான்றிதழில் தங்களின் பெயர் இடம்பெறுவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறினர்.

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரின் நிறுவனத்திற்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் வாழ்த்தினர்.

தணிக்கைக் குழுவினரின் பாராட்டு, அந்தப் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது.