Home கலை உலகம் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் கவலைக்கிடம்!

இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் கவலைக்கிடம்!

539
0
SHARE
Ad

msv3சென்னை, ஜூலை 7 – உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை, திடீரெனெ மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 87-வது பிறந்தநாளைக் கொண்டாடிய எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நலக்குறைவு காரணமாக அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சக்கரை நோய் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உடல் நலம் பெற்றதாகக் கூறப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சிலரும் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், எம்எஸ்வி-யின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததுள்ளதாகவும், அவர் நினைவிழந்துள்ளதால், அவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இதன் காரணமாகத் திரையுலகினரும், எம்எஸ்விக்கு நெருக்கமானவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் அவரின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.