Home இந்தியா வேடிக்கையாகக் குழந்தைகளை மது குடிக்க வைக்கும் அக்கிரமம்!

வேடிக்கையாகக் குழந்தைகளை மது குடிக்க வைக்கும் அக்கிரமம்!

593
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 8- திருவண்ணாமலை அருகே 4 வயதுச் சிறுவனை மது குடிக்க வைத்து வேடிக்கை பார்த்த அதிர்ச்சியான காட்சி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடர்பாகச் சிறுவனின் தாய்மாமன் முருகன் என்பவரும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

சிறுவனின் தாய்மாமன் முருகன் காவல்துறையினரிடம், “நாங்கள் ஒன்றாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தோம்.

#TamilSchoolmychoice

03-beer3-600எங்களைச் சிறுவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் விளையாட நினைத்து, விளையாட்டாக 2 மில்லி பீரில் தண்ணீர் கலந்து கொடுத்தோம்.

அதனைப் பிரேம்குமார் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்பினான். நாங்கள் விளையாட்டாகச் செய்த காரியம் இவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளான்.

இந்நிலையில், இதேபோல் மற்றொரு சம்பவம்  வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

அந்தக் காணொளிக் காட்சியானது சுமார் 2 நிமிடம் 15 விநாடிகள் வரை ஓடுகிறது.

காட்சியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனுக்கு அவனது தந்தையின் சம்மதத்துடன் மதுகுடிக்கக் கற்றுக் கொடுப்பது போன்று தெரிகிறது.

a351298b-0276-4faa-ac69-ea2fd0f901c0_S_secvpfசிறுவனுக்கு அருகில் இருப்பவர்கள் பேசும் பேச்சை வைத்துப் பார்க்கும் போது, அது தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் பேச்சு வழக்குபோல் உள்ளது. எனவே, தென்மாவட்டப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம்.

இதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.