Home இந்தியா பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, சீனா மற்றும் ரஷ்யா அதிபருடன் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, சீனா மற்றும் ரஷ்யா அதிபருடன் சந்திப்பு

777
0
SHARE
Ad

ரஷ்யா, ஜூலை 9- மத்திய ஆசிய நாடுகளுக்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று ரஷ்யா சென்றடைந்தார்.

 சீன அதிபருடன் சந்திப்பு:

modi-xi-759

#TamilSchoolmychoice

உபாவில் நடந்த சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கும், மோடியும் சந்தித்துக் கொண்டனர்.

இச்சந்திப்பில் மும்பைத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் பயங்கரவாதி லக்வி ஜாமினில் வெளியானது பற்றியும், இந்தியா-சீனாவுக்கிடையேயான எல்லைப் பிரச்சினை பற்றியும் பேச்சுவார்த்தை நடந்தது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவ் சுன்யின் கூறியதாவது:

“உலகச்சந்தையில், இந்தியாவும் சீனாவும் வளர்ந்துவரும் நாடுகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்திய-சீன உறவின் மூலம், நாட்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டில் ஜியின் இந்தியச் சுற்றுப்பயணமும், மே மாதம் மோடியின் சீனச் சுற்றுப்பயணமும் இருநாடுகளுக்கிடையே உறவுகளை மேம்படுத்தியது. தற்போதைய சந்திப்பு இருநாட்டு உறவினை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.

கடந்த ஓராண்டில், மோடி- ஜி ஜின் பிங் இருவரும் சந்திப்பது இது 5வது முறையாகும்.

அணுமின் உற்பத்தியில் இந்தியா- ரஷ்யா ஒத்துழைப்பு:

52044878

ரஷ்யாவின் யூஎப்ஏ நகரில், அந்நாட்டு அதிபர் புதினைச் சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையில், அணு மின்சார உற்பத்தி விவகாரத்தில் இந்தியா ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும், விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ரஷ்யாவில் யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கும் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.