Home கலை உலகம் காதல் கிசுகிசுவால் சமந்தாவுக்கு சிக்கல்

காதல் கிசுகிசுவால் சமந்தாவுக்கு சிக்கல்

724
0
SHARE
Ad

samanthaசென்னை, மார்ச்.8- சித்தார்த்துடன் எழுந்துள்ள காதல் கிசுகிசுவால் சமந்தாவை அணுக இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நீ தானே என் பொன்வசந்தம்‘, ‘நடுநிசி நாய்கள்‘, ‘விண்ணை தாண்டி வருவாயா‘ ஆகிய 3 படங்களில் நடித்தார் சமந்தா.

ஆனால் இவை அவருக்கு வெற்றியை ஈட்டித்தரவில்லை. ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படம் மட்டுமே கோலிவுட்டில் சமந்தாவுக்கு ஹிட்டாக அமைந்தது.

#TamilSchoolmychoice

தமிழில் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் உடல்நிலை காரணமாக அதிலிருந்து விலகினார். இதனால் கோலிவுட் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்கினர்.

இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக சமந்தாவிடம் கடந்த ஆண்டே பேசப்பட்டது.

தமிழில் வேறு படங்கள் இல்லாததால் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டார். நான் ஈ வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து சமந்தா படங்கள் ஒப்புக்கொள்ளாமல் காலதாமதம் செய்தார்.

இதற்கிடையில் பல புதுமுகங்கள் அதிரடியாக பிரவேசம் செய்துள்ளனர். இவர்களது போட்டியை சமாளித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் சமந்தா இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சித்தார்த்துடன் காதல் கிசுகிசுவில் சமந்தா சிக்கி இருப்பதால் புது படங்களுக்காக அவரை அணுக இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.