Home கலை உலகம் கோச்சடையான் ஜூலை மாதம் வெளியீடு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோச்சடையான் ஜூலை மாதம் வெளியீடு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

659
0
SHARE
Ad

kochadaiyaan சென்னை, மார்ச்.8- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்க, அவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் கோச்சடையான்.

கோச்சடையான் வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், “படத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் கணிசமாக நேரம் எடுக்கின்றன.

#TamilSchoolmychoice

‘தி அவெஞ்சர்ஸ்’ படத்துக்கு 3 டி மற்றும் அதற்கான ‘ஸ்டீரியோ டி ‘  ஒலி தொழில் நுட்பத்தைக் கொடுத்த ஹாலிவுட் குழுவினர் இந்தியா வந்து கோச்சடையானுக்கு, அதே தொழில்நுட்பங்களைச் செய்து வருகின்றனர்.

ஜூலை மாதம் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம். ஏப்ரலுக்குள்  தயாரிப்பு வேலைகள் முடிந்துவிடும். இதுகுறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை ஸ்டுடியோ டி நிறுவனத்திடமே விட்டுவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.