Home இந்தியா ப.சிதம்பரம், கார் விபத்தில் சிக்கினார்!

ப.சிதம்பரம், கார் விபத்தில் சிக்கினார்!

560
0
SHARE
Ad

IN23_CHIDAMBARAM_118131fசென்னை, ஜூலை 12- முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற கார் இன்று காலை சென்னையில் விபத்துக்குள்ளானது.

டெல்லி செல்வதற்காகக் காரில் விமான நிலையம் புறப்பட்டார் ப.சிதம்பரம். அவரது கார் ஆளுநர் மாளிகை அருகேயுள்ள சிக்னலை நோக்கிச் செல்லும் போது, திடீரென சிகப்புச் சமிக்ஞை விளக்கு எரிய, ப.சிதம்பரத்தின் கார் சட்டென்று நின்றது.

அப்போது அவரது காருக்குப் பின்னால் வந்த பாதுகாப்புக் காவலர்களின் கார் மீது மற்றொரு கார் வந்து மோதியது.

#TamilSchoolmychoice

இதனால், பாதுகாப்புக் காவலர்களின் கார், ப.சிதம்பரம் காரின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில் ப.சிதம்பரத்தின் காரில் பின்பக்கம் நொறுங்கியது. இச்சம்பவம் சினிமாக் காட்சி போல், கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் ப.சிதம்பரத்துக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

ஆனால் பாதுகாப்புக் காவலர்கள் மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக காரில் இருந்து இறங்கிய ப.சிதம்பரம், காயமடைந்த காவலர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர், விமான நிலையம் சென்ற ப.சிதம்பரம் டெல்லிக்குப் புறப்பட்டார்.