Home உலகம் “அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்”- ஈரான் ஆவேசம்!

“அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்”- ஈரான் ஆவேசம்!

544
0
SHARE
Ad

eeraஈரான், ஜூலை 12- அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

அவர் எழுதிய ஆங்கிலக் சுட்டுரை ஒன்றில் அமெரிக்கா மீதான தனது ஆவேசத்தை இவ்வாறு கொட்டியுள்ளார்.

“ஆணவத்துக்கு எதிராக ஈரான் எவ்வாறு போராட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டு வருகிறார்கள். ஆணவத்துக்கு எதிராகப் போராடுவது புரட்சிகரமான கொள்கைகளில் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

அவ்வாறு செய்யவில்லையென்றால் நாம் புனித குரானைப் பின்பற்றுபவர்களாக இருக்க முடியாது. ஆணவத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்.

ஆணவத்திற்குச் சிறந்த உதாரணம் அமெரிக்கா. அதன் ஆணவத்தை அடக்குவோம். அதனை எதிர்த்துப் போராடத் தயாராகுங்கள்” என்று அவர் அக்கட்டுரையில் கூறியுள்ளார்.