நியூயார்க், ஜூலை 12- ஃபேஸ் புக் எனப்படும் முகநூல் மக்களிடையே மிகவும் பிரபலமாகத் தொடங்கிய போது, அந்தக் கண்டுபிடிப்பில் தமக்கும் பங்குண்டு என்று அதன் நிறுவனர் மார்க்ஜுகர் பெர்க்குடன் சேர்ந்து மேலும் மூன்று பேர் உரிமை கொண்டாடினார்கள்.
இது தொடர்பாக வழக்கும் தொடுத்தனர். வழக்கின் முடிவின் நீதிமன்றம், அந்த மூன்று பேருக்கும் 65 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது.
இந்த மூன்று பேரில் ஒருவர் இந்தியர். அவர் பெயர் திவ்யா நரேந்திரர். வயது 33.
நியூயார்க்கில் பிறந்த அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
தற்போது “Sumzero’ என்ற பெயரில் ஒரு முதலீடு தொடர்பான இணையதளத்தை(investment website) நடத்துகிறார்.
இவருக்கு இப்போதும் ஃபேஸ்புக்கில் 0.022 சதவிகித உரிமை உள்ளது.