Home இந்தியா இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் முடங்கியது: சீனாவின் கைவரிசையா?  

இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் முடங்கியது: சீனாவின் கைவரிசையா?  

541
0
SHARE
Ad

gallerye_180931467_924380பெங்களூர், ஜூலை 12- வெளிநாட்டின் செயற்கைக் கோள்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்ணில் செலுத்துவதற்காக வணிக நோக்கில் தொடங்கப்பட்டது இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ். இது 1992 -ஆம் ஆண்டு பெங்களுரூவில் ஏற்படுத்தப்பட்டது.

ஆன்ட்ரிக்ஸ், வெள்ளிக்கிழமையன்று 1440 கிலோ எடை கொண்ட 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது.

இந்நிலையில் இதன் இணையதளம் திடீரெனச் செயல் இழந்து விட்டது.

#TamilSchoolmychoice

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல் இழந்துள்ளதாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தாலும், சீனாவைச் சேர்ந்த முடக்கர்கள் இந்த இணையதளத்தை முடக்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.