Home கலை உலகம் பாகுபலி இவ்வளவு வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை- ராஜமெளலி!

பாகுபலி இவ்வளவு வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை- ராஜமெளலி!

525
0
SHARE
Ad

ss-rajamouliஐதராபாத், ஜூலை 13- பாகுபலி படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று உண்மையாகவே நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

உலகளவில் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மிகப் பெரிய வெற்றியைக் குவித்துள்ளது.

இந்தியத் திரைப்பட வரலாற்றில், ஒரு தென்னிந்தியத் திரைப்படம் ஒன்று வெளியாகி, பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

#TamilSchoolmychoice

இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான இயக்குநர் ராஜமௌலி, நிறைகுடம் தளும்பாது என்பதற்கு அறிகுறியாக அமைதியாகவே இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“பாகுபலி குறித்து வரும் செய்திகள், வசூல் விபரங்கள் எங்களுக்கே மலைப்பைத் தந்துள்ளது. இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றியை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இந்தப் படம் ஒரு புதிய களம், புதிய அனுபவம் என்பதால் இரசிகர்களை ஈர்த்துள்ளது. ஒரு புதிய உலகைக் காணும் ஆர்வத்தில் வருகிறார்கள். அடுத்த பாகம் இன்னும் சிறப்பாக வரும். அதை அடுத்த ஆண்டு நிச்சயம் வெளியிட்டுவிடுவோம்” என்றார்.