Home கலை உலகம் விரைவில் ராஜமெளலி இயக்கத்தில் அஜித்!

விரைவில் ராஜமெளலி இயக்கத்தில் அஜித்!

665
0
SHARE
Ad

ajithoriginalஐதராபாத், ஆகஸ்டு 4- பாகுபலி படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்றுள்ள ராஜமெளலி விரைவில் அஜித்தை இயக்கவிருக்கிறார்.

பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வரும் ராஜமெளலி, அப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் மகேஷ்பாபுவை வைத்துத் தெலுங்கில் ஒரு படம் இயக்கவுள்ளார்.

அந்தப் படத்தை அடுத்துத் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரு படம் இயக்கத் திட்டமிட்டுள்ளார். அப்படத்திற்கான கதை அஜித்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால்,அஜித்திடம் பேசிச் சம்மதம் வாங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதில் அஜித்துடன் அல்லு அர்ஜூனும் நடிக்கவிருக்கிறார்.

இத்தகவலைப் பாகுபலியின் கதாசிரியரும் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.