சென்னை, ஜூலை 13- ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் போலியானவை என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், லெக்ஸ் பிராப்பர்டீஸ், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனம் என்றும் திமுகவின் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்து அளித்த தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.