Home உலகம் பாரிஸ்: பிரிமார்க் அங்காடியில் இருந்து 18 பிணைக்கைதிகள் பத்திரமாக மீட்பு!

பாரிஸ்: பிரிமார்க் அங்காடியில் இருந்து 18 பிணைக்கைதிகள் பத்திரமாக மீட்பு!

578
0
SHARE
Ad

primark-store-parisபாரிஸ், ஜூலை 13 – பாரிஸ் பிரிமார்க் அங்காடியில் மூன்று கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 18 பிணைக்கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக பாரிஸ் பத்திரிக்கை லீ மாண்டே வெளியிட்டுள்ள செய்தியில், “பிணைக்கைதிகள் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்களில் ஒருவன் அந்த அங்காடியில் வேலை பார்த்தவன் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே மற்ற ஊடகங்களில் கொள்ளையர்கள் மூவரையும் காவல் துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனினும், அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.