லண்டன், ஜூலை 14 – பரபரப்பான வெற்றி, எதிர்பாராத தோல்வி, வெற்றிக்கான ஆர்ப்பரிப்பு, தோல்வியின் விரக்தியில் பெருகிய கண்ணீர் என வழக்கம் போல் நடந்து முடிந்தது விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி. இந்நிலையில், லண்டனில் உள்ள கில்ட்ஹாலில் பன்னாட்டு நட்சத்திரங்கள் ஒன்று கூட விம்பிள்டன் வெற்றியாளர்கள் விருந்து கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்தியாவைப் பொருத்தவரை இந்த விம்பிள்டன் மறக்க முடியாத ஒன்று என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும். பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவும், கலப்பு இரட்டையரில் லியாண்டர் பயஸும் வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினர். இவர்கள் வெளிச்சத்தில் ஜூனியர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சுமித் நகலையும் மறந்துவிடக்கூடாது. இந்த வெற்றி இந்தியர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். எனினும், வெற்றியாளர்கள் விருந்தில் இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமே.
விம்பிள்டன் வெற்றியாளர்கள் விருந்தின் படங்களைக் கீழே காண்க: