Home நாடு லோ யாட் மோதல்: மேலும் 18 பேர் கைது!

லோ யாட் மோதல்: மேலும் 18 பேர் கைது!

628
0
SHARE
Ad

Low yatகோலாலம்பூர், ஜூலை 14 – லோ யாட் வணிக வளாகத்திற்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரச் சம்பவம் தொடர்பில் கடந்த 2 நாட்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 16 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அந்த வணிக வளாகத்தில் கைபேசி திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரும் இதில் அடங்குவார் என்றும் நகர காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ தாஜுடின் முகமட் ஈசா தெரிவித்துள்ளார்.

“நான்கு பிரிவுகளின் கீழ் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நிகழ்ந்த திருட்டு, கலவரச் சம்பவம் தொடர்பாகவும், ஞாயிற்றுக்கிழமை ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதற்காகவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

“கைபேசி திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் அதை விற்றவர்களால் ஏமாற்றப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. மேலும் அந்நபர் காவல்துறையில் பணியாற்றும் ஒருவரது மகன் என்பதும் சரியல்ல. சமூக ஊடகங்களில் இச்சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. கலவரம் வெடிக்க இதுவும் முக்கிய காரணம்,” என்று தாஜுடின் கூறினார்.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அக்குறிப்பிட்ட பகுதி பாதுகாப்பாக இருப்பதால் பொதுமக்கள் தாராளமாக சென்று வரலாம் என்றார்.