Home வணிகம்/தொழில் நுட்பம் மலாயன் வங்கி பயனர்கள் இனி கைரேகை மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்! 

மலாயன் வங்கி பயனர்கள் இனி கைரேகை மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்! 

624
0
SHARE
Ad

maybankகோலாலம்பூர், ஜூலை 14 – நாட்டின் முன்னணி வங்கியான மலாயன் வங்கி, தனது வாடிக்கையாளர்களின் நேரத்தை சேமிப்பதற்காக செல்பேசி வழி பணப்பரிமாற்றங்களில் ‘பின்’  (PIN) எண்களுக்கு பதிலாக கைரேகை பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசிகளில் கைரேகை பதிவு செய்தால் மட்டும் போதும், மிக எளிதாக பணப்பரிவர்த்தனைகளையும், கணக்கு பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக பயனர்கள் Maybank2u செயலியில் இருக்கும் Quick Touch சேவையை திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின் எண்கள் செயல்பாட்டை விட 70 சதவீதம் அதிவேகமான இந்த புதிய கைரேகை பதிவு பற்றி மலாயன் வங்கியின் முக்கிய அதிகாரி ஹமிருல்லாஹ் பூர்ஹான் கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் வங்கி இருப்பு தொடர்பாக 500,000 மேற்பட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பின் எண்கள் மூலம் நடைபெறும் இந்த செயல்முறை வேகம் குறைவாக உள்ளது. எங்கள் வாடிக்கையாளரின் நேரத்தை சேமிக்க நாங்கள் இந்த கைரேகை பதிவு முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்சமயம் இந்த Quick Touch சேவை புதிய ஆப்பிள் கருவிகளில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபோன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோரில் Maybank2u செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.