இலங்கை, மார்ச்.8- குடும்பத்தை பாதுகாக்கும் பெண்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டை நேசிக்கும் தலைமுறையை உருவாக்க அனைத்து பெண்களும் திடசங்கற்பம் பூண வேண்டும். பீதி, பயங்கரவாதம் போன்றவற்றினால் அதிகளவு பெண்களே பாதிக்கப்பட்டனர்.
நாட்டில் மீண்டும் இவ்வாறான இருண்ட யுகம் உருவாக இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை நேசிக்கும் மக்கள் வாழும் வரையில் பெற்ற வெற்றிகளை மீளத் தோற்கடிக்க முடியாது.
நாட்டின் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். அனைத்து துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உயர்வடைந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.