Home இந்தியா டோர்னியர் விமானிகள் மூவரும் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு!

டோர்னியர் விமானிகள் மூவரும் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு!

633
0
SHARE
Ad

flightjuly-10சென்னை, ஜூலை 14- கடந்த ஜூன் 8-ஆம் தேதி காணாமல் போன டோர்னியர் விமானத்தின் விமானிகள் மூன்று பேருடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

33 நாள் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு,காணாமல் போன அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியும் சில உடைந்த பாகங்களும் நான்கு நாட்களுக்கு முன் மீட்கப்பட்டன.

மீதிப் பாகங்களும், அதில் பயணித்த மூன்று விமானிகளாகிய வித்யாசாகர், எம்.கே சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகியோரும் மீட்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று அந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று விமானிகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதில் ஒரு விமானியின் கைக் கடிகாரம் கிடைத்துள்ளது.

இந்த விமானத் தேடுதலில் ஈடுபட்ட கப்பல் தன்னுடைய பணியை முடித்துக் கொண்டு காகிநாடாவுக்குத் திரும்பிவிட்டது.