Home இந்தியா ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த எம்.எஸ்.வி உடல் தகனம்!

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த எம்.எஸ்.வி உடல் தகனம்!

545
0
SHARE
Ad

unnamed (1)சென்னை, ஜூலை 15- எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிச் சடங்குகள் இன்று  காலை 8 மணிக்குத் தொடங்கின . 9:40  மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் நடிகர் கமல்ஹாசன் முதலான திரை உலகினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.விஸ்வ நாதன் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு பெசன்ட்நகர் மயானம் நோக்கிப் புறப்பட்டது.

#TamilSchoolmychoice

வாகனத்தின்  முன்னால் இசைக் கலைஞர்கள் வயலினில் சோக ராகம் இசைத்தபடி சென்றனர். மேலும், வழி நெடுகிலும் எம்.எஸ்.வி-யின் பாடல்கள் ஒலித்தபடி இருந்தன.

வாகனத்தின் மேலே எம்.எஸ்.விஸ்வநாதனின் புகைப்படம் வைக்கப்பட்டு அதில் ‘இசையால் வணங்குகிறோம்’ என எழுதப்பட்டிருந்தது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி ஊர்வலப் பாதையெங்கும் அவரது ரசிகர்களும், பொது மக்களும், திரண்டு நின்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

வீட்டில் இருந்து புறப்பட்டும் போது முதல் பாடலாகப் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாடலும், மயானத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலை இறக்கிய போது ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலும் பாடப்பட்டது.

ஊர்வலம் மயானத்தை அடைந்ததும் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.

பின்னர் அனைவரும் கனத்த நெஞ்சத்தோடு திரும்பிச் சென்றனர்.