Home உலகம் கைபேசி திருட முயன்றவருக்கு 42 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு: சீன நீதிமன்றம் உத்தரவு

கைபேசி திருட முயன்றவருக்கு 42 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு: சீன நீதிமன்றம் உத்தரவு

431
0
SHARE
Ad

பெய்ஜிங், ஜூலை 18 – பொதுவாக திருடுபவர்களுக்கும், திருட முயற்சித்து அகப்படுபவர்களுக்கும் தான் தண்டனை கிடைக்கும். ஆனால் சீனாவில் இதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. அங்கு செல்பேசியைத் திருட முயன்றவரை அதன் உரிமையாளரும் சிலரும் தாக்கியுள்ளனர்.

mobilephone_us--621x414--621x414--621x414இதையடுத்து தாக்கப்பட்டவருக்கு 42 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு சீனாவின் டோங்குவான் பகுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுவான் என்ற நபரிடம் இருந்து செங் என்பவர் செல்பேசியை திருட முயன்றுள்ளார். ஆனால் வசமாக சிக்கிக் கொண்டார். இதையடுத்து யுவானும் மேலும் இருவரும் செங்கை அடித்து உதைத்து அனுப்பியுள்ளனர்.

#TamilSchoolmychoice

காயமடைந்த செங் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க, விசாரணைக்கு ஆஜரான யுவான் உள்ளிட்ட மூவரும் செங்கை அடித்ததாக ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவானது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், செங் செல்பேசி திருட முயன்றது குறித்து போலீசில் புகார் அளிக்க யுவான் தவறிவிட்டதாகவும், அவரும் மற்ற இரு நபர்களும் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர் என்றும் சாடியது.

இதையடுத்து யுவானுக்கு 42 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவரை மூன்று மாத கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

செல்பேசியைத் திருட முயன்ற செங்குக்கு த்ணடனை விதிக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை. எனினும் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என யுவான் தெரிவித்துள்ளார்.