Home நாடு உண்மைக்காகப் போராடுங்கள்: சிறையில் இருந்து அன்வாரின் பெருநாள் வாழ்த்து

உண்மைக்காகப் போராடுங்கள்: சிறையில் இருந்து அன்வாரின் பெருநாள் வாழ்த்து

800
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 18 – உண்மைக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என சுங்கைபூலோ சிறையில் இருந்தபடி பெருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

Anwar ibrahimஅவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் காணொளிக் காட்சி யூ டியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிக் ஜிடான் பாடல் ஒலிக்க, அன்வார் தனது குடும்பத்தாருடன் இருக்கும் படங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளி காட்சி, சமூக ஊடகங்கள் வழி பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

காணொளி பதிவு வெளியான உடனேயே ஏறத்தாழ 2500 பேர் அதைப் பார்வையிட்டுள்ளனர். நிக் ஜிடான் பாடல் முடிந்த பின்னர் தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் அன்வார்.

#TamilSchoolmychoice

சுங்கைபூலோ சிறைச்சாலை சுவர்களின் பின்னணியில் பேசும் அவர், “Eid Mubarak, உங்களுடன் தொடர்பில் இருக்க கிடைத்த இந்த வாய்ப்பு, துன்பப்படும் மக்களுக்கான அக்கறையை அதிகப்படுத்தியுள்ளது. மன உறுதியுடன் நடைபோடுங்கள், உண்மைக்காக தொடர்ந்து போராடுங்கள்,” என்று தமது வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கிறார்.

ஓரினப் புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ள அன்வார் தற்போது சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெருநாளையொட்டி அவரது குடும்பத்தார் சிறையில் அவரை சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.