Home இந்தியா மராட்டிய மாநில ஆளுநரிடம் யாகூப் மேமன் கருணை மனுத் தாக்கல்

மராட்டிய மாநில ஆளுநரிடம் யாகூப் மேமன் கருணை மனுத் தாக்கல்

588
0
SHARE
Ad

yakub_660_032113093148நாக்பூர், ஜூலை22 – மும்பை தொடர் குண்டு வெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனின் தூக்குத் தண்டனையை நேற்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவன் 30–ஆம் தேதி தூக்கில் போடப்பட உள்ள நிலையில், கடைசி முயற்சியாக, மராட்டிய மாநில ஆளுநருக்கு அவன் கருணை மனு அனுப்பியுள்ளான்.

யாகூப் மேமனின் வழக்கறிஞர் அனில் கெதம், நாக்பூர் மத்தியச் சிறையில் யாகூப் மேமனை நேற்று மாலை சந்தித்து, யாகூப் மேமன் சார்பில் தயாரித்த கருணை மனுவை  அவனிடம் கொடுத்தார்.

பின்னர் அந்தக் கருணை மனுவை யாகூப் மேமன், மராட்டிய மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்குமாறு கூறி, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தான். அதன்பின்னர் அக்கருணை மனு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice