குறிப்பாக, சிங்கப்பூரில் சீனர் அல்லாதவர் பிரதமராக முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லீ சியான் லூங் கூறுகையில், “தற்போதய தலைமுறையில் அது சாத்தியமே. ஆனால், அது குறிப்பிட்ட அந்த நபரைப் பொருத்து தான் இருக்கிறது. அவர் சீனர்களோடும் உரையாட வேண்டும். சீனர் அல்லாத மலேசியர்கள் மற்றும் இந்தியர்களோடும் உரையாட வேண்டும்.”
“இப்போதும், நீங்கள் ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால், மக்களுடன் மக்களாக கலந்திருக்க வேண்டும் என்றால், சீன மொழியில் தான் பேச வேண்டும். சிறியவர்கள் கூட மாண்டரின் மொழியில் பேசுவதைத் தான் விரும்புகின்றனர். உங்களால் மாண்டரியன் பேச முடியவில்லை என்றால், உங்களால் மக்களுடன் இணைந்து இருக்க முடியாது. அதுவே எதார்த்தம்” என்று அவர் கூறியுள்ளார்.
தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்று இருப்பது பற்றி அவர் கூறுகையில், “சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள் என பல்வேறு இன மக்கள் சிங்கப்பூரில் வசித்தாலும், அவர்கள் அனைவரும் சிங்கப்பூரியன்கள் என்ற ஒற்றை அடையாளத்தையே முன்னிலைப்படுத்துகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கான காரணம் பற்றி அவர் கூறுகையில், “அதற்கு மிக முக்கியக் காரணம் ஜிகாதிக்கள் தான்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், அண்டை நாடுகளில் 90 சதவீத மக்கள் இஸ்லாமியர்கள் தான். அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால், யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தீவிரவாதத்தை தடுக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.