Home நாடு மாசாய் தமிழ்ப் பள்ளியின் ‘விஸ்வரூபம் ஆரம்பம்’ – மாபெரும் இன்னிசை கலை இரவு

மாசாய் தமிழ்ப் பள்ளியின் ‘விஸ்வரூபம் ஆரம்பம்’ – மாபெரும் இன்னிசை கலை இரவு

644
0
SHARE
Ad

ஜோகூர் பாரு, ஜூலை 25 – மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி நிதிக்காகப் பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து படைக்கும் ‘விஸ்வரூபம் ஆரம்பம்’, என்ற மாபெரும் இன்னிசை கலை இரவு, நாளை ஜூலை 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8 மணியளவில், ஜோகூர் பாருவில் உள்ள ஜோகூர் பாரு பல்நோக்கு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடத்தப்பட உள்ளது.

மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் , சிங்கை, மலேசியா மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் படைக்கவுள்ளனர்.

Untitled

#TamilSchoolmychoice

பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படி மாசாய் தமிழ்ப் பள்ளி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்:

(திரு ஸ்ரீதரன்: 016-786 4110, திரு சிவா: 013-749 6790, திரு தமிழ்த்திரு : 012-700 9170, திரு கார்த்திக்: 012-300 0233, திரு முரளி: 016-710 7880)