Home One Line P1 சிங்கை கலை விழாவில் 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் குவித்த மாசாய் குழுவகத் தமிழ்ப்...

சிங்கை கலை விழாவில் 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் குவித்த மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி

3005
0
SHARE
Ad

மாசாய் – கடந்த ஜூலை 27-ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்த சிங்கை கலைப் படைப்பு விழாவில் (Singapore Performance Arts Festival) 5 பிரிவுகளில் நாடகங்களையும் கலைப் படைப்புகளையும் படைத்து மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் புதிய சாதனையைப் பதித்துள்ளதோடு, அந்தப் போட்டிகளில் 1 தங்கம், 4 வெள்ளி என பதக்கங்களையும் வாரிக் குவித்துள்ளனர்.

சிங்கையின் மரினா மண்டரின் தங்கும் விடுதியில் இந்த கலைவிழா நடைபெற்றது.

5 பிரிவுகளில் நாடகங்களைப் படைத்த மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட முறையில் நாடகங்களைப் படைத்து பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

தங்கப் பதக்கம் வென்ற ‘சூப்பர் ஹீரோஸ்’

#TamilSchoolmychoice

9 முதல் 10 வயது வரையிலான பிரிவில் ‘சூப்பர் ஹீரோஸ்’ என்ற நாடகம் படைத்த மாணவர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர். அந்தக் குழுவில் கீழ்க்காணும் மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்:

AKKHASH A/L ARUMUGAM

NALIN YUGENDRA A/L SURESH

THENESH  A/L NILAKKUMARAN

NEVILIYEN A/L MORISS JOSOPH

DIKSHAN A/L ANAN

HARAN A/L BRABAHGARAN

B.SHRISTIKUMAR A/L BALASANTHAR

வெள்ளிப் பதக்கம் வென்ற “மோனா அண்ட் தெ லிட்டல் அவதார்ஸ்”

11 முதல் 12 வயது வரையிலான பிரிவினருக்கான நாடகப் போட்டியில் “மோனா அண்ட் தெ லிட்டல் அவதார்ஸ்” (‘Moana and the little Avatars’) என்ற நாடகத்தைப் படைத்த குழுவினர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். அந்தக் குழுவில் கீழ்க்காணும் மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்:

KAYALVILY A/P KUMAR

SOOBITTSA A/P PARAMASIVA

PRISHIKAA MENON  A/P DIVAGARAN

SRI RAAGAVENDRA NAIDU A/L VASUDEVAN

TRILOCHANNA NAIR A/P SIVA

LIVASHIENI A/P BALASUBRAMANIAM

KESHIKA A/P VIJAYA KUMAR

THAVANESH KUMAR A/L VIJAYA KUMAR

“அலி அண்ட் ஆ சோங்” – வெள்ளிப் பதக்கத்தை வென்ற நாடகம்

மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் படைத்த “அலி அண்ட் ஆ சோங்” என்ற (‘Ali and Ah Chong’) மற்றொரு நாடகமும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. இந்த நாடகத்தைப் படைத்த குழுவில் பின்வரும் மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்:

THARSHENDREN NAIR A/L SUDHIR NAIR

SHEKINAH NESHA POOVANESAN

NHETHENIYEN MORISS JOSOPH

MAHNISH NAIR A/L C. BASKARAN NAIR

JIISMITHA A/P VEJAYAN

DHINNESH A/L PREMKUMAR

TARUN KUMAR A/L J. JEYAKUMAR

வெள்ளிப் பதக்கம் வென்ற “மெர்மெய்ட்” நாடகம்

“மெர்மெய்ட்” (The Mermaid) என்ற பெயரில் படைக்கப்பட்ட மற்றொரு நாடகமும் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. இந்த நாடகத்தைப் படைத்த குழுவில் கீழ்க்காணும் மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்:

DEVESH A/L DEVA DASS

DHIVYAH A/P RAVINDRAN

NISHA SURESH KUMAR

HEMALETCHUMY KODISWARAN

KAVYAVASHINI SIVALINGAM

NISHA PREGASH

NIMISSHA A/P SARAVANAN

தனிநபர் இசைப் படைப்பிற்கும் வெள்ளிப் பதக்கம்

மேடையின் தனிநபராகப் படைக்கப்படும் இசை நிகழ்ச்சியிலும் (solo Musical theatre performance) மாசாய் தமிழ்ப் பள்ளி பங்கு பெற்றது. மாசாய் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவியான அருளினி ஆறுமுகம் தனது படைப்புக்காக வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

நமது நாட்டின் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் அண்டை நாடான சிங்கப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றிவாகை சூடியது, மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகவும், சவாலாகவும் இருந்தது என மாணவர்கள் குழுவுக்குப் பொறுப்பேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பல நாடகப் போட்டிகளில் தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் மாசாய் தமிழ்ப் பள்ளி வெற்றிகளைக் குவித்து வருவதற்கு அப்பள்ளியின் நாடகப் பிரிவுக்குத் தலைமையேற்று பாடுபட்டு வரும் ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பங்கேற்புக்கும், படைப்பாற்றலுக்கும் உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பெரியாச்சி பெருமாள், பள்ளியின் புறப்பாடத் துணைத் தலைமையாசிரியர் நாகேந்திரன் மற்றும் துணைத் தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முரளி மற்றும் அவர்தம் குழுவினர், பெருமளவில் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், நாடகப் படைப்புகளுக்கான ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, நாகவல்லி, புஷ்பவல்லி, செந்தாமரை, தனேஸ்வரி, மற்றும் ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்கள் ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் இந்தப் போட்டிகளுக்குப் பங்கேற்பாளர்களைத் தயார் செய்த கஸ்தூரி இராமலிங்கம். மேலும் பள்ளி சார்பாக ஒத்துழைப்பு வழங்கிய ஒத்மானுக்கும் தனது தனிப்பட்ட நன்றியை கஸ்தூரி இராமலிங்கம் புலப்படுத்திக் கொண்டார்.

சிங்கை கலைப் போட்டிகளின் சில படக்காட்சிகளை இங்கே காணலாம்: