Home One Line P1 காஷ்மீர்: இந்தியத் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்

காஷ்மீர்: இந்தியத் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்

1509
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் – காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் அதிரடி முடிவுகளைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றும் அதிரடி முடிவை எடுத்தது.

அதுமட்டுமல்லாமல், புதுடில்லியில் இருக்கும் தனது தூதரையும் பாகிஸ்தான் மீட்டுக் கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவுகளைத் தற்காலிகமாக இரத்து செய்வதாகவும் அறிவித்திருக்கும் பாகிஸ்தான், இருநாடுகளுக்கும் இடையிலான அயலுறவை தரம் குறைத்துள்ளது.

இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் ஏறத்தாழ தூதரக உறவுகள் முறிவடைந்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், தனது நாட்டின் வான்வெளி மீதான பயன்பாட்டுக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 7) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (படம்) நடத்திய தேசிய உயர்நிலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஏற்கனவே, பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா அந்நாட்டுடனான வணிக உறவுகளை இரத்து செய்திருந்தது.

இருநாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே மோசமான தூதரக உறவுகள் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானின் புதிய அதிரடி முடிவுகளால் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படாது எனக் கருதப்படுகிறது.