Home வணிகம்/தொழில் நுட்பம் விமானக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துங்கள் – ஸ்பைஸ்ஜெட் புதிய சலுகை!

விமானக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துங்கள் – ஸ்பைஸ்ஜெட் புதிய சலுகை!

852
0
SHARE
Ad

SpiceJetசென்னை, ஜூலை 25 – கடுமையான பொருளாதார போராட்டத்தை சந்தித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு யோசனைகளை கையாண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 ரூபாய் கட்டணத்தை அறிவித்த ஸ்பைஸ்ஜெட், தற்போது தவணை முறையில் விமானக் கட்டணத்தை செலுத்தலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘ஈஎம்ஐ’ (EMI) என்று அழைக்கப்படும் தவணை முறையில் கட்டணம் செலுத்தும் இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் விமானக் கட்டணத்தை 3-12 மாதத் தவணைகளில் கட்டிக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு ஸ்பைஸ்ஜெட் ‘புக் நௌ, பே லேட்டர்’ (Book now Pay latter) என்று பெயரிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இலகுத் தவணையில் விமான கட்டணத்தை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், ‘ஆக்சிஸ் வங்கி’ ( Axis Bank), ‘எச்எஸ்பிசி வங்கி’ (HSBC Bank), ‘கோட்டாக் வங்கி’ (Kotak Bank) மற்றும் ‘ஸ்டாண்டட் சார்ட்டட் வங்கி’ (Standard Chartered Bank) ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் கடன் அட்டைகள் (Credit Card) வைத்திருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

விமானக் கட்டணத்திற்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் கால அளவைப் பொறுத்து, வட்டி வீதம் 12-14 சதவீதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமாவது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.