Home இந்தியா பாராளுமன்றத்தில் மோதல் முற்றுகிறது : காங்கிரஸைக் கண்டித்துப் பாஜக தர்ணா!

பாராளுமன்றத்தில் மோதல் முற்றுகிறது : காங்கிரஸைக் கண்டித்துப் பாஜக தர்ணா!

578
0
SHARE
Ad

parபுதுடில்லி, ஜூலை 25- மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து நான்கு நாட்களும் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கிப் போய் உள்ளன.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடியின் ஊழலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும்,ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும் உதவியதாகப் பிரச்சினை, மருத்துவ நுழைவுத்  தேர்வு தொடர்பான வியாபம் ஊழல் பிரச்சினை போன்ற முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மழைக்காகக் கூட்டத் தொடர் ஆரம்பித்த நாள் முதல் கடும் அமளியும் ஆர்ப்பாட்டமும் செய்து வருவதால், தொடர்ந்து நான்காவது நாட்களாகப் பாராளுமன்றம் முடங்கிப் போயுள்ளது.

இந்நிலையில்,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் மத்தியப் பிரதேச  முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியம் மூவரும் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை இயங்க விடமாட்டோம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தீராத இப்பிரச்சினைகளால் திங்கட்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து,பாராளுமன்றத்தை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், 5 மாநிலக் காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கு எதிராகப் பாஜக-வினர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறாகப் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பாஜக-விற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மோதல் முற்றி வருகிறது.