Home இந்தியா ராஜீவைப் போல் மோடியையும் மனித வெடிகுண்டால் கொல்ல சதி: புலனாய்வுத்துறை எச்சரிக்கை!

ராஜீவைப் போல் மோடியையும் மனித வெடிகுண்டால் கொல்ல சதி: புலனாய்வுத்துறை எச்சரிக்கை!

417
0
SHARE
Ad

modi-புதுடில்லி,ஜூலை 25- பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் துவக்கி வைப்பதற்காகச்  செல்லும் பிரதமர் மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யச் சதி நடப்பதாக மத்தியப் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பீகாரில் உள்ள பாட்னா மற்றும் முசாபர்பூரில் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை பிரதமர் மோடி பீகார் செல்கிறார். பீகாரில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை அங்கு தொடங்கி வைக்கிறார்.

இந்தப் பொதுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கும் போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தமிழ்நாட்டில் வைத்து மனிதவெடிகுண்டு மூலம் விடுதலைப்புலிகள் கொலை செய்ததைப் போன்று, பிரதமர் மோடியையும் கொலை செய்யப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

#TamilSchoolmychoice

1991-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பொது நிகழ்ழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜீவ்காந்தி, மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொடூரமான முறையில் சிதையுண்டு மாண்டதை உலக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அத்தகைய கொடூரத் தாக்குதலைப் போன்றே மோடியையும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதியை மனிதகுண்டாக மாற்றிக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், மோடியின் பயணத் திட்டம் மிகவும் கவனமாகவும் அதிக பாதுகாப்புப் பொருந்தியதாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுக்கு முன், பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு,பாட்னாவில் மோடி கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. அதில் தெய்வாதீமாக மோடி தப்பினார்.

அச்சம்பவம் போன்று எந்தச் சம்பவமும் தற்போது நடந்து விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.