Home வணிகம்/தொழில் நுட்பம் கேஎல்ஐஏ 2-வில் குளம் போல் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் – ஏர் ஆசியா தலைவர் எச்சரிக்கை

கேஎல்ஐஏ 2-வில் குளம் போல் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் – ஏர் ஆசியா தலைவர் எச்சரிக்கை

747
0
SHARE
Ad

KLIA2கோலாலம்பூர், ஜூலை 27 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், கடந்த ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையம் (கேஎல்ஐஏ 2) நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரையும் கடந்து தான் விமானங்கள் செல்வதாகவும், வாடகைக் கார் வழித்தடங்களில் விரிசல்களும் காணப்படுவதாகவும் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த பாதிப்புகளினால் விமானங்கள் தாமதம், அதன் பாகங்களில் தேய்மானங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் அபாயங்கள் போன்றவை ஏற்படுகின்றன என்றும் ஐரீன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விமானம் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் பாதிப்பில்லை என்று குறிப்பிட்டுள்ள ஐரீன், மிகப் பெரிய பாதிப்புகள் வருவதற்குள் மலேசிய அதிகாரிகள் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“விமான நிலையம் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் சில பகுதிகளில் மறுசீரமைப்பு செய்திருக்கிறது. ஆனால் நிரந்தரத் தீர்வு தேவை” என்றும் ஐரீன் தெரிவித்துள்ளார்.