சென்னை, ஜூலை 27 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கார்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்க இருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த மே 11-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின் படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் விடுதலையாகினர்.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், கணக்குப்பிழை இருப்பதாகவும், பிழைகளை சரியாக கவனிக்காததால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதாகவும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் ஆர்ச்சார்யா உள்ளிட்டோர் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசை வலியுறுத்தினர்.
இதனை ஏற்ற கர்நாடக அரசு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேல்முறையீடு செய்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.