சண்டிகார், ஜூலை 27 – பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இராணுவ சீருடையில் இருந்த தீவிரவாதிகள், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, பொது மக்கள் நடமாட்டம் உள்ள பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்துள்ள பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளதால், தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் போல் உடை அணிந்து இந்திய எல்லையை கடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும், இராணுவமும், அதிரடிப்படையும் அந்த பகுதிக்கு விரைந்துள்ளது. இதற்கிடையே ரயிலை தகர்க்கும் எண்ணத்தில் தீவிரவாதிகள் தண்டவாளத்தில் 5 வெடிகுண்டுகள் வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, ஜம்மு-அமிர்தசரஸ் இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அமைச்சர்கள் பலரும் பஞ்சாப் மாநிலத்திற்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் விரிவான செய்திகள் தொடரும்…