Home நாடு ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ திட்டத்தில் சேர மகாதீருக்கு கிட் சியாங் வலியுறுத்து!

‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ திட்டத்தில் சேர மகாதீருக்கு கிட் சியாங் வலியுறுத்து!

538
0
SHARE
Ad

Lim-Kit-Siangகோலாலம்பூர், ஜூலை 27 – நாட்டைக் காப்பாற்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் ஆதரவு எதிர்பார்க்கிறார் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரும், ஜசெக மூத்த தலைவருமான லிம் கிட் சியாங்.

மகாதீருடன் சேர்ந்து முன்னாள் துணைப்பிரதமர்களான அப்துல்லா அகமட் படாவியும், மூசா ஹீத்தாமும், “மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற கூட்டணியை அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை எதிர்கொள்ள வேண்டும் என்று லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி விவகாரம் இந்த நாட்டை அழித்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த முறை எல்லா அரசியல்  தலைவர்களும், கட்சி பேதமின்றி, இனம்,  சமயம்,  வயது,  பாலினம் ஆகிய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து  ‘மலேசியாவைப்  பாதுகாப்போம்’ திட்டத்தை அமைக்க வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

Dr Mahathir“ஜசெக மற்றும் அனைத்து முற்போக்கு  அரசியல்  சக்திகளும் ஒன்று சேர்ந்து ‘மலேசியாவைப்  பாதுகாப்போம்’  என்ற இலக்குடன் தயாராகி வருகின்றன” என்று கோலாலம்பூரில் இன்று ஜசெக கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்கு, மூன்று துன்-களான மகாதீர், அப்துல்லா மற்றும் மூசா அல்லது  ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியிலுள்ள முற்போக்கு சக்திகள் அல்லது  முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார்  இப்ராகிம் ஆகியோர் ஏற்பாடு செய்யலாம் என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.