புதுடில்லி, ஜூலை 27- பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறைச் செயலாளர் கோயல், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பஞ்சாப்பில் நிலவும் தற்போதைய தீவிர நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார் மோடி.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெளிவாகத் தெரிந்துள்ளதால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீவிரவாதிகளை எதிர்கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.