Home நாடு கனி பட்டேல் பதவி ஓய்வு – அபாண்டி அலி புதிய சட்டத்துறைத் தலைவர்!

கனி பட்டேல் பதவி ஓய்வு – அபாண்டி அலி புதிய சட்டத்துறைத் தலைவர்!

864
0
SHARE
Ad

gani-patail-july27கோலாலம்பூர், ஜூலை 28 – நாட்டின் சட்டத்துறை தலைவராக செயல்பட்டு வந்த டான்ஸ்ரீ அப்து கானி பட்டேல், உடல்நலக் கோளாறுகள் காரணமாக நேற்றோடு தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தத் தகவலை அரசாங்கத்தின் தலைமை அதிகாரியான அலி ஹம்சா இன்று அறிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி முகமட் அபாண்டி அலி, புதிய சட்டத்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்றும் அலி ஹம்சா அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

Comments