Home கலை உலகம் நடிகை விஜயலட்சுமியின் கால் முறிந்தது

நடிகை விஜயலட்சுமியின் கால் முறிந்தது

778
0
SHARE
Ad

Vijaya-Lakshmi-Pictureசென்னை, மார்ச் 9 –  நடன ஒத்திகையின் போது தவறி விழுந்ததில் நடிகை விஜயலட்சுமியின் கால் எலும்பு முறிந்தது.

இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, ‘சென்னை 28’ படம் மூலம் அறிமுகமானார். ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’, ‘அதே நேரம் அதே இடம்’ உட்பட பல படங்களில் நடித்தார்.

தற்போது ‘ரெண்டாவது படம்’, ‘வெண்ணிலா வீடு’ என்ற படங்களில் நடித்து வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்காக நடன இயக்குனர் காயத்ரியின் வீட்டில் நடன ஒத்திகையில் ஈடுபட்டு வந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் ஒத்திகை நடந்து கொண்டிருந்தபோது பளபளப்பான தரையில் கால் வழுக்கி கீழே விழுந்தார். அவரது வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மாவுகட்டு போடப்பட்டது.

இதுபற்றி விஜயலட்சுமி கூறும்போது, “எனது கவனக் குறைவுதான் இதற்கு காரணம். இப்போது ஓய்வெடுத்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் சரியாகும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார்” என்றார்.