Home நாடு புக்கிட் அமான் தீ விபத்து: முக்கியமல்லாத ஆவணங்கள் மட்டுமே அழிந்தன – காலிட்

புக்கிட் அமான் தீ விபத்து: முக்கியமல்லாத ஆவணங்கள் மட்டுமே அழிந்தன – காலிட்

515
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 30 – காவல்துறை தலைமையகமான புக்கிட் அமானில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

11141304_10152925563966746_2445087924392991764_n

#TamilSchoolmychoice

புக்கிட் அமானின் 9 மற்றும் 10ஆம் தளங்களில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என தாங்கள் நம்புவதாக காவல்துறை செயலகத்தின் உதவி ஆணையர் டத்தின் அஸ்மாவதி அகமட் தெரிவித்தார்.

“தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை. மற்ற தீ விபத்துக்கள் போலவே இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும். அதன் வழி விபத்துக்கான காரணம் கண்டறியப்படும்,” என்றார் அஸ்மாவதி.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சேத விவரங்கள் முழுமையாகத் தெரியவரவில்லை.

தீ விபத்து குறித்து நேற்று இரவு 7.20 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும், அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டு இயக்குநர் அசிசான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“மொத்தம் 24 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு சுமார் 7.47 மணியளவில் தீ கட்டுக்குள் கண்டு வரப்பட்டது,” என்றார் அசிசான் இஸ்மாயில்.

முக்கியமல்லாத ஆவணங்கள் மட்டுமே அழிந்தன

இந்த சம்பவத்தை அறிந்த பலர் நட்பு ஊடகங்களில் இது குறித்து பல்வேறு ஆரூடங்களைக் கூறினர். முக்கியமான ஆவணங்களை அழிக்கும் நோக்கில் தான் இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், தீயில் எரிந்தவை முக்கியமான ஆவணங்கள் அல்ல என்று தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.