தமிழ் நாட்டின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான தனுஷ், சமீபகாலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது படங்களில் தொடர்ச்சியாக புகை பிடிக்கும் காட்சிகளை வேண்டுமென்றே திணித்து ரசிகர்களை தவறான வழிகளில் திசைதிருப்புகிறார் என பா.ம.க உள்ளிட்ட பல கட்சிகள், குற்றம் சாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் கலாமின் திடீர் இறப்பு அறிந்திருந்தும் நள்ளிரவு வரை தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கலாம் மறைந்த இரவில் சரியாக 8.27 மணிக்கு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், கலாமின் இறப்பு குறித்து இரங்கல் செய்தியினை பதிவு செய்த தனுஷ், நள்ளிரவில் திரை உலக நண்பர்களுடன் பிறந்தநாளை ‘உற்சாகமாக’ கொண்டாடி உள்ளார். இந்த கொண்டாடத்தில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குனர்கள் செல்வராகவன், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஒத்துமொத்த நாடே சோகத்தில் தவித்துக் கிடக்கும் பொழுது, சமூகத்தில் மதிக்கத் தக்க இடத்தில் இருக்கும் தனுஷ், இப்படி நடந்து கொண்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இணையவாசிகள் பலர் மிகக் கடுமையாக தனுஷை விமர்சித்து வருகின்றனர்.