டாக்டர் சொக்கலிங்கம், சிறுகதை, கட்டுரை, புதுக் கவிதை என தளங்களிலும் தனது எழுத்துப் படிவங்களை பதிவு செய்து வந்தார்.
அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரான கவிஞர் முரசு நெடுமாறன் சொக்கலிங்கத்தின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொண்டார். “மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே தமிழ் இலக்கியங்களின் மீதும், எழுத்துப் பணிகளின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் டாக்டர் சொக்கலிங்கம். அவரது மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும்” என்றும் முரசு நெடுமாறன் மேலும் தெரிவித்தார்.