Home இந்தியா சென்னையில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்

சென்னையில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்

639
0
SHARE
Ad

Tamil-Daily-News_60991632939

சென்னை, மார்ச் 9 – சென்னையில் நேற்று சூரியனைச் சுற்றி வானில் வெண்மை நிற ஒளி வட்டம் தெரிந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிமாகவும் இரவில் குளிர்ச்சியாகவும் உள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னையில் வானில் சூரியனைச் சுற்றி வெண்மை நிற ஒளி வட்டம் காணப்பட்டுள்ளது.அந்த ஒளி வட்டத்தின் உள்பகுதியில் சற்று சிவந்த நிறமும், நடுப்பகுதியில் வெளிர் நீல நிறமுமாக இருந்துள்ளது. இது குறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் ஐயம்பெருமாள் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“வளி மண்டலத்தில் உள்ள காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும்போது அதில் உள்ள நீர்த்துளிகள் முப்பரிமாண கண்ணாடிகள் போல இருக்கும். அவை சூரியனின் ஒளியை அப்படியே பிரதிபலிப்பதால் இதுபோன்ற ஒளி வட்டம் தோன்றும். இதற்கு ‘சன்ஹாலோ’ என்று பெயர். காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் இது நிகழ்கிறது.  இதுபோல கடந்த 3 மாதத்துக்கு முன்பும் வானத்தில் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் இல்லை”என்றார்.