Home கலை உலகம் நடிகர் வினுசக்கரவர்த்தி கவலைக்கிடம் : சுயநினைவை இழந்தார்!

நடிகர் வினுசக்கரவர்த்தி கவலைக்கிடம் : சுயநினைவை இழந்தார்!

573
0
SHARE
Ad

viசென்னை, ஜூலை 31- நடிகர் வினுசக்கரவர்த்தி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் தன் சுயநினைவை இழந்து விட்டதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

‘வண்டிச்சக்கரம்’ படத்தில் கதாசிரியராகத் திரையுலகில் அறிமுகமான வினுசக்கரவர்த்தி, பின்பு நடிகராகி, நூற்றுக் கணக்கான படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும்,நகைச்சுவைப் பாத்திரத்திலும் நடித்துப் புகழ் பெற்றார்.

அவருடைய உருவமும் குரலும் அவருக்குச் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தைத் தேடித் தந்தன.

#TamilSchoolmychoice

உடல்நலக் குறைவு காரணமாகச் சமீபகாலமாக எந்தப் படத்திலும் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில்,நேற்று திடீரென ரத்த அழுத்தமாகி மயங்கி விழுந்ததால், உடனடியாக அவரைச் சென்னை வடபழனியில் உள்ள  சூர்யா மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அவர் முற்றிலும்  சுயநினைவை இழந்துவிட்டதாலும், அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.