Home இந்தியா பாராளுமன்றத்தைத் தடங்கலின்றி நடத்த சபாநாயகர் கூட்டிய எதிர்க்கட்சிக் கூட்டம் தோல்வி

பாராளுமன்றத்தைத் தடங்கலின்றி நடத்த சபாநாயகர் கூட்டிய எதிர்க்கட்சிக் கூட்டம் தோல்வி

562
0
SHARE
Ad

paபுதுடெல்லி, ஜுலை 31- எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கிக் கிடக்கும் நிலையை மாற்ற, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நன்முறையில் நடைபெற எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை வேண்டி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிமுக உறுப்பினர்  தம்பிதுரை மற்றும் திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

#TamilSchoolmychoice

சபாநாயகர் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை.

பாராளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் தான் பிரச்சினை நீடிக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.மேலும், “எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத வரை போராட்டம் தொடரும்” என்றும் கூறினார்.

“பிரதமர் வாயத் திறந்து எந்தக் கருத்தும் கூறுவதில்லை” என்ற குற்றச் சாட்டையும் எதிர்க்கட்சியினர் முன் வைத்தனர்.

தங்களது கருத்து ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் தங்கள் குரல் உரத்து ஒலிக்கும் என்பதாகவே எதிர்க்கட்சியினரின் பேச்சு அமைந்தது. எனவே, எந்தத் தீர்வும் ஏற்படாமல் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

 

 

.