அடுத்து, அடுத்தகட்ட வளர்ச்சியாகப் படத் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.
ஆம், அவர் “பிரபுதேவா ஸ்டூயோஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். நடனத்திலும் இயக்கத்திலும் மக்களின் ரசனைக்கேற்றபடி புதுமையையும் வித்தியாசத்தையும் புகுத்தும் கலை கைவரப் பெற்ற பிரபுதேவா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் சின்னம் (logo) முதற்கொண்டு அனைத்தும் புதுமையாக இருக்கும்படி வடிவமைத்திருக்கிறார்.
இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், வாய்ப்புக் கிடைக்காமல் அல்லாடும் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாகப் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
தனது ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ சர்வதேசத் தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களைத் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழியிலும் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும், நல்ல படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பளித்து அவர்களை வெவ்வேறு மொழிகளுக்கு இட்டுச் செல்வதில் தனது நிறுவனம் முனைப்பாகச் செயல்படும் எனவும் பிரபு தேவா தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் பற்றிய விவரங்களை வரும் ஆகஸ்டு 3-ஆம் தேதி பிரபுதேவா அறிவிப்பார்.
நடிகர் தனுஷ் வெற்றிகரமான நடிகராக இருப்பது மட்டுமல்லாமல், தரமான படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவரைப் போல் பிரபுதேவாவும் வெற்றிகரமான இயக்குநராக இருப்பதைப் போன்று, தரமான படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெறுவார் என நம்பலாம்.