Home இந்தியா ஒரே இரவில் ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கியது இந்திய அரசு!

ஒரே இரவில் ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கியது இந்திய அரசு!

2134
0
SHARE
Ad

indiaபுது டெல்லி, ஆகஸ்ட் 3 – இந்தியாவில் ஆபாச வலைத்தளங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளன. பல வலைத்தளங்களை திறந்தால் ‘வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தியும், பல வலைத்தளங்களில் வெற்று திரை மட்டுமே வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக அரசு ரீதியில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளிவரவில்லை. அதன் காரணமாக  வலைத் தளங்கள் ஏன் முடக்கப்பட்டன? என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. எனினும், குறிப்பிட்ட அந்த இணைய தளங்களின் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது தான், மத்திய அரசு பாதுகாப்பு கருதி அந்த இணையத் தளங்களை முடக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

திறன்பேசிகள், கணினி என எந்தவொரு தளத்திலும் அத்தைகைய வலைத்தளங்கள் திறக்கப்படவில்லை. வலைத்தளங்களின் முடக்கம் குறித்து இணையவாசிகள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பிஎஸ்என்.எல் – எம்.டி.என்.எல் ஆகிய பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வோடபோன், ஹாத்வே, ஏசிடி போன்ற தனியார் மற்றும் பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என ஒட்டுமொத்தமாக அனைத்து இணைப்புகளிலும் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூகத்தை வக்கிரத்திற்குள்ளாக்கும், ஆபாச வலைத்தளங்கள் முடக்கப்படுவது வரவேற்புக்குரியது தான் என்றாலும், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டியது அரசின் கடமை என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலகஅளவில் ஆபாச தளங்களைப் பார்ப்பதில் முன்னிலை வகிப்பது இந்தியர்கள் தான் என பிரபல ஆபாச வலைத் தளமான ‘போர்ன் ஹப்’ (Porn Hub) தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.