Home கலை உலகம் “உலகநாயகனுக்கும், சன்டிவிக்கும் நன்றி” – இசையமைப்பாளர் பாலன்ராஜ்

“உலகநாயகனுக்கும், சன்டிவிக்கும் நன்றி” – இசையமைப்பாளர் பாலன்ராஜ்

625
0
SHARE
Ad

Balanrajகோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – ‘உலகநாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் செல்லியலில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரைக்கு அப்பாடலின் இசையமைப்பாளர் பாலன்ராஜ் (படம்) நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் கடிதம் உங்கள் பார்வைக்கு:

“நான் பாலன்ராஜ், உலகநாயகன் பாடலின் இசைமையப்பாளர். சன்டிவியில் ஒளிபரப்பப்பட்ட பாபநாசம் சிறப்பு முன்னோட்டத்தில் எனது பாடல் இடம்பெற்றது குறித்து செல்லியலில் செய்தி வெளியிட்டிருந்ததற்கு நன்றி. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வரவேற்பதற்காக எனது பாடலைப் பயன்படுத்தி அதற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த சன்டிவிக்கும் எனது நன்றி. மலேசியாவில் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

#TamilSchoolmychoice

“அதேவேளையில், சன் டிவி நிர்வாகத்திற்கு எனது பணிவான வேண்டுகோள், இந்தப் பாடலை மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பும் பட்சத்தில் இசையமைத்தவர்களின் பெயரையும் அதில் குறிப்பிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு இசையமைப்பாளர் பாலன்ராஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் பாடலைக் கீழ் காணும் சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்:

 https://www.youtube.com/watch?v=L_TT8DjrA6Y