Home கலை உலகம் தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து நிதி உதவி

தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து நிதி உதவி

682
0
SHARE
Ad

imagesசென்னை, மார்ச் 9- நீரின்றி பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து நிதி உதவி அளிக்கவுள்ளார்.

11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 100,000 ரூபாய் நிதி வழங்குவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். அவர் எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’ என்ற புத்தகம் விவசாயிகள் நிலையை மையமாக வைத்து உருவானது . மூன்றாம் உலகப்போர் புத்தக விற்பனை மூலம் கிடைத்த பணத்திலிருந்து இந்த நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதாக வைரமுத்து கூறியுள்ளார்.