கோலாலம்பூர், மார்ச் 9- சபாவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பின்னணியாக தாம் இருப்பதாக, தன்னை சம்பந்தப்படுத்தி தவறான செய்தி வெளியிட்ட டிவி3 மற்றும் உத்துசான் மலேசியா ஆகியவற்றின் மீது 10 கோடி வெள்ளி இழப்பீடு கேட்டு டத்தோஸ்ரீ அன்வார் அவதூறு வழக்கு ஒன்றை நேற்று பதிவு செய்தார்.
இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்பதால் தான் 100 மில்லியன் இழப்பீட்டைக் கேட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாக அன்வாரின் வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.
இவ்வழக்கில் உத்துசான் மலேசியா, டிவி 3 ஆகிய நிறுவனங்களுடன் மேலும் மூவர் மீதும், மற்றும் அதன் நிர்வாக பதிப்பாசிரியர்களுடன், செய்தியாசிரியர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இடைக்காலத்தடை உத்தரவு
மேலும் தம்மை இது போன்ற அவதூறு செய்கின்ற வார்த்தைகளை பிரசுரிப்பது அல்லது செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத்தடையுத்தரவுக்கும் டத்தோஸ்ரீ அன்வார் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.