Home இந்தியா மதுக்கடைகளை அகற்றும் போராட்டம் எதிரொலி: ஜெயலலிதா அவசர ஆலோசனை!

மதுக்கடைகளை அகற்றும் போராட்டம் எதிரொலி: ஜெயலலிதா அவசர ஆலோசனை!

487
0
SHARE
Ad

jayalalithaசென்னை, ஆகஸ்டு 3- அரசு நடத்தும் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகளை மூடக் கோரித் தமிழ்நாடு முழுவதிலும் அரசியல் கட்சியினரும், அவர்களைத் தொடர்ந்து தற்போது மாணவர்களும் போராடி வருகின்றனர்.

நேற்று வைகோ தலைமையில் அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடந்த மதுவிலக்குப் போராட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.

இதற்குக் கருணாநிதி முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவ- மாணவியர் மதுக்கடைகளை அடித்து நொறுக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் மீதும் காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அரசியல் கட்சியினரைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளதால் அரசுக்குப் பெரும் நெருக்கடிஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.இந்த அவசரக் கூட்டத்தில் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.